வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் அ.த.க.வின் மேம்பட்ட கல்வி நிலை-8ல் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறும் இம்மாணவர்களைப் பெருமிதத்துடன் பாராட்டி மகிழ்கிறோம்!!!!

வாழ்த்து மடல்

நிலை 8ல் இருந்து பட்டம் பெற்று செல்லும் என் மாணவச் செல்வங்களுக்கு, உங்கள் தமிழ்க் கல்விப் பயணமென்னும் நீர்வழியில் நானும் ஒரு சிறு படகாய் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்.
இந்த வருடம் பெருந்தொற்று காரணமாக நாம் நேரில் சந்தித்து பள்ளி என்னும் சூழலையை உருவாக்க முடியாத நிலையிலும்நீங்கள் மூவரும் ஆர்வத்துடன் வந்துத் தமிழ் கற்றீர்கள். அதை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.  
கற்ற கல்வியை மற்ற மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு தேவையான திறமையும்,தமிழ் அறிவும் உங்களிடம் உள்ளது.அதை  நீங்கள் மூவரும் செவ்வனே செய்வீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.அதற்காக ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி என்றும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கும். என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

– நிலை-8 ஆசிரியர் – மலர் கணேஷ்